Home
>
India >
Chennai >
K M DEVAN Makkal Murasu Katchi /மக்கள் முரசு கட்சி
K M DEVAN Makkal Murasu Katchi /மக்கள் முரசு கட்சி
Share
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from K M DEVAN Makkal Murasu Katchi /மக்கள் முரசு கட்சி, Political Party, No. 65, BBC Villa Complex, 7 th Floor, Broadway, Chennai.
மக்கள் முரசு கட்சி அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம்.மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சமத்துவமான, முன்னேற்றமான மற்றும் ஊழல் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவது எங்கள் கட்சியின் முக்கிய நோக்கம்.
“அனைத்து தரப்பு மக்களும் வளர்ச்சி பெற வேண்டும்” என்பதே எங்கள் அடிப்ப மக்கள் முரசு கட்சி ஊழல்,லஞ்சம் அற்ற வெளிப்படையான நிர்வாகம், சாதி, மதம்,இனம்,மொழி என்று மக்களை பிரித்தாளும் அரசியல் களைய பாடுபடுவோம்.,சமத்துவம
ாய், சகோதரத்துவமாய் வாழ வழி வகை செய்யும். , இயற்கை வளங்களை பாதுகாக்க பாடுபடுவோம்.. தமிழக மக்களின் நலன் காக்க மற்றும் உரிமைகளை மீட்டிட, சிறுபான்மையினர் நலன் காக்க, அனைத்து சமூகத்தினரும் உள்ளடங்கிய பொருளாதார வளர்ச்சி காண , இடஒதுக்கீடு 100 சதவிதம் கடைபிடிக்க , வேலையில்லா திண்டாட்டதை போக்கி இளைஞர்களை தொழில் முனைவோராக ஆக்கி ஊக்கமளிக்க , தொலைநோக்கு பார்வையுடன் மக்களுக்கான திட்டங்கள் திட்டி தமிழகத்தை முன்னோடி மாநிலமாக ஆக்க பாடுபடும் . தமிழக மீனவர்களை இலங்கை காவல் படையினரால் கைது செய் , படகுகளை பறிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது இதற்கு தீர்வு கட்ச தீவை மீட்பதே ஆகும். எனவே கட்ச தீவை மீட்க குரல் கொடுப்போம். தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பாடுபடும். மக்கள் முரசு கட்சியில் இணைந்து செயல்பட தொடர்புக்கு திரு.K.M.தேவன் (நிறுவனத்தலைவர்)
24/05/2026
வெற்றி என்பது அதிர்ஷ்டம் அல்ல; தொடர்ந்து முயற்சி செய்தவர்களுக்கு கிடைக்கும் பரிசு
K.M.தேவன் B.C.A.,B.L.,
நிறுவனத்தலைவர் - மக்கள் முரசு கட்சி
#மக்கள்முரசுகட்சி
| #மமுக
l
24/05/2026
எளிய மக்களின் குரலை அரசியலின் ஒலிக்க வைக்க...
பெண்களின் முன்னேற்றதை ஊக்குவிக்க...
இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க…
புதிய அரசியல் பயணம் தொடங்கியுள்ளது.
உங்கள் ஆதரவு மட்டும் போதாது…
உங்கள் பங்களிப்பும் தேவை!
இன்றே மக்கள் முரசு கட்சியில் இணைந்திடுங்கள்.
இந்த மாற்றப் பயணத்தில் நீங்களும் இணைய வேண்டும்!”
“உங்கள் குரல் இந்த இயக்கத்திற்கு தேவை!”
K.M.தேவன் B.C.A.,B.L.,
நிறுவனத்தலைவர் - மக்கள் முரசு கட்சி
#மக்கள்முரசுகட்சி
| #மமுக
l
24/05/2026
மக்களின் வலியை உணராத அரசியல் வேண்டாம்…
மக்களோடு நிற்கும் புதிய அரசியல் வேண்டும். பாமர மக்களின் வாழ்க்கை முன்னேற்றமே எங்கள் அரசியலின் இலக்கு....
K.M.தேவன் B.C.A.,B.L.,
நிறுவனத்தலைவர் - மக்கள் முரசு கட்சி
#மக்கள்முரசுகட்சி
| #மமுக
l
24/05/2026
தோல்வி என்பது முடிவு இல்லை; அது ஒரு பாடம். மிகப்பெரிய அனுபவம்.
பல பெரிய மனிதர்கள் பலமுறை தோல்வியடைந்த பிறகுதான் வெற்றி பெற்றார்கள்.
உங்களை ஊக்கப்படுத்தும் மக்களுடன் இருங்கள்.
எப்போதும் எதிர்மறையாக (negative) பேசுபவர்களிடம் இருந்து தூரமாக இருங்கள்.
விதை போட்ட உடனே மரம் வராது.
அதேபோல் உழைப்பின் பலனும் நேரம் எடுத்துக்கொள்ளும்.
14/05/2026
சட்டசபையில் உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக விடுக்கும் விமர்சனங்களுக்கு சட்டசபையில் பதில் அளித்தால் தான் சபையில் பதிவு செய்யப்படும். வீட்டுக்கு போய் சமூகவலைத்தளங்களில் பதிவு போட்டால் ஒரு பயனும் இல்லை மாண்பு மிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களே...
#மமுக
#மக்கள் முரசு கட்சி
14/05/2026
அனைவருக்கும் எனது அன்பார்ந்த வணக்கம்.
உங்கள் பகுதியின் வளர்ச்சிக்காக…
சாலை வசதி / குடிநீர் திட்டம் / கழிவுநீர் வடிகால் / பெண்கள் பாதுகாப்பு / இளைஞர் வேலைவாய்ப்பு
மக்கள் நல திட்டங்கள் /பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்க / அதிகார வர்க்கத்திற்கு எதிராக போராட...
இவற்றை நேர்மையாக செயல்படுத்த மக்கள் சார்ந்த நிர்வாகம் அவசியம்.அதற்காக மக்கள் சேவை மனப்பான்மை கொண்ட இளைஞர்கள், பெண்கள், சமூக செயற்பாட்டாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களையும் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அன்புடன் அழைக்கிறோம்.
ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என எந்த நிலை நிர்வாகமாக இருந்தாலும், மக்கள் பிரச்சினைகளை நேரில் அறிந்து தீர்வு காண தன்னலமற்ற மக்கள் பிரதிநிதிகள் களம் காண வாருங்கள்.
இது பதவிக்கான பயணம் அல்ல…
மக்கள் நலத்திற்கான பொறுப்பு!
“உள்ளாட்சியில் நல்லாட்சி உருவாக்க ஒன்றிணைவோம்!”
K.M.தேவன் B.C.A.,B.L.,
நிறுவனத்தலைவர்- மக்கள் முரசு கட்சி
#மக்கள்முரசுகட்சி
| #மமுக
#உள்ளாட்சி
l l l | l l l
l l
l l
|
|
l
l
04/05/2026
மக்கள் முரசு கட்சியின் நிர்வாகிகளே,
2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நமக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கலாம். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பான ஒன்று. தோல்விகள் தான் நம்மை இன்னும் பக்குவப்படுத்தும், பலப்படுத்தும். இந்த தேர்தலில் நாம் மக்களை நேரடியாக சந்தித்தோம் அவர்களுடைய குறைகளை கேட்டோம். நாம் யார் என்பதனை அறிமுகம் செய்து கொண்டோம்.இது முடிவல்ல, ஒரு புதிய தொடக்கத்தின் ஆரம்பம். மக்கள் தீர்ப்பை நாம் மதிக்கிறோம். தோல்வியைக் கண்டு கலங்க வேண்டாம். நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் இருக்கிறது என்பதனை உணர்த்துகிறது.
இந்தத் தேர்தலில் நீங்கள் அனைவரும் இரவு பகல் பாராது, கடுமையாக உழைத்தீர்கள். உங்களின் ஒவ்வொரு சொட்டு வியர்வையும் வீண் போகாது. மக்களிடம் நாம் கொண்டு சேர்த்த கொள்கைகள் நிச்சயம் ஒருநாள் வெல்லும
தேர்தல் முடிந்தாலும், மக்களின் பிரச்சனைகளுக்காக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம். மக்களின் நம்பிக்கையை வெல்ல, இனியும் தொடர்ந்து களத்தில் நின்று உழைப்போம்
இந்த தோல்வி, நம்மை இன்னும் பலவீனப்படுத்த அல்ல, பலப்படுத்தவே வந்துள்ளது. பலவீனங்களை கண்டறிந்து, புதிய வியூகங்களுடன் நாம் மீண்டு வருவோம்.
துணிந்து நில்லுங்கள், தொடந்து போராடுவோம்!
நாளை வெற்றி நமதே!
K M தேவன் B.C.A.,B.L.,
- நிறுவனத்தலைவர்
மக்கள் முரசு கட்சி
22/04/2026
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இறுதி நாளான 21.04.2026 அன்று எம்.ஆர்.நகர் மார்க்கெட் அருகில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டபோது...
21/04/2026
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இறுதி நாளான 21.04.2026 அன்று எம்.ஆர்.நகர் பவானி அம்மன் கோயில் அருகில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டபோது .