09/06/2026
தமிழக பெண்களின் பாதுகாப்புஅரணாக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு திட்டத்தின் மூலமாக பெண் காவலர்களை உருவாக்கம் செய்துள்ள தமிழக முதல்வர் ோசப்விஜய் அவர்களுக்கு
தமிழக சமத்துவ மக்கள் கட்சி சார்பாகவும் தமிழக மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். Chief Minister of Tamil Nadu #தமிழ்நாடு #தமிழகவெற்றிகழகம். Thamilaga Samathuva Makkal Katchi - தமிழக சமத்துவ மக்கள் கட்சி
09/06/2026
சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ECR) விரிவாக்கத் திட்டத்தில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, தமிழக சமத்துவ மக்கள் கட்சி (தசமக) வெளியிட்டுள்ள அறிக்கை.
முக்கியக்
(முறைகேடுகள்)
நிலம் கையகப்படுத்துதல்: 20 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்காக ₹940 கோடி நிதி வழங்கப்பட்டதில் {கமிசன்} என பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
சாலைப் பணி (Road Work) முறைகேடு: 10.3 கிலோமீட்டர் நீள சாலைப் பணிக்காக மட்டும் ₹175 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கணக்கீட்டின்படி ஒரு.கி மீட்டருக்கு ₹ ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் (1 மீட்டருக்கு கணக்கீட்டின்படி அது ₹1,75,000 ஆகும்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது முதல் முக்கிய முறைகேடாகக் கருதப்படுகிறது..
மழைநீர் வடிகால் முறைகேடு: இத்திட்டத்தில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக. 10.3 கி.மீட்டருக்கு ₹53 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஒரு மீட்டர் அளவிற்கு ₹5 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது இரண்டாவது முறைகேடாகப் பார்க்கப்படுகிறது.
கம்பி வேலி (Fencing) முறைகேடு: திட்டமிட்டபடி 10.3 கி.மீ அளவிற்கு கம்பி வேலி அமைக்காமல், வெறும் 8 கி.மீ அளவிற்கு மட்டுமே கம்பி வேலி அமைக்கப்படஉள்ளளது. இதற்கு ₹13 கோடிகள் என ஒதுக்கப்பட்ட நிலையில், ஒருமீட்டருக்கு 1.25.000/ ருபாய் என கணக்கீடு மிக அதிகமாகக் காட்டப்பட்டுள்ளது மூன்றாவது முறைகேடாகும்.
தற்போதையநிலையில்
"இத்தனை கோடிகள் கொண்ட இத்திட்டத்தில் பல கோடி ருபாய்கள் முறைகேடுகள் நடைபெற்றதாக மக்களின் ஆதங்கம் தற்போது வரை 70% கூட நிறைவடையவில்லை.
தமிழக சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக. தமிழக அரசுக்கு முக்கியக் கோரிக்கைகள்:
முழுமையான ஆய்வு: தமிழக அரசு இத்திட்டத்தை முழுமையாகவும் நேர்மையாகவும் ஆய்வு செய்ய வேண்டும்.
அதில் முறைகேடுகள் நடந்தது உறுதியானால், இத்திட்டத்திற்குப் பொறுப்பாக இருந்த அரசு அதிகாரிகள் அனைவரையும் உடனடியாகப் பணிநீக்கம் செய்திட வேண்டும்.
இத்திட்டத்தின் மீதமுள்ள பணிகளைச் சீரமைத்து, வரைமுறைப்படுத்தி, விரைவாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர தமிழக அரசு உத்தரவிட வேண்டும். Chief Minister of Tamil Nadu . தமிழக சமத்துவ மக்கள் கட்சி #தமிழகவெற்றிகழகம் #மாநிலநெடுஞ்சாலைதுறை
05/06/2026
தூத்துக்குடிமாவட்டம் #திருச்செந்தூர் தாலுகா பள்ளிபத்து கிராமத்தைச் சேர்ந்த த.பானுமதி வயது {78} இன்று 5/6/2026 அதிகாலை 6.30 மணி அளவில் தனது வீட்டின் அருகே உள்ள மின்சார கேபிளில் இருந்து தனது வீட்டிற்கு வரும் வயரில் மின்கசிவால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் மிகவும் வருந்தகத்தக்கது.
தொடர்ந்து தமிழகம் எங்கும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மின்சாரத் துறையின் அஜாக்கிரதின் காரணமாக பலர் மின்சாரம் தாக்கிஉயிரிழந்த செய்தி அறிகிறோம் உயிரிழந்த நபர்களுக்கு அரசு உரிய நீதியை உடனடியாக வழங்கிடவும் இது போன்ற செயல்கள் நடைபெறாத வண்ணம் மின்சார வாரியம் துரிதமாக ஈடுபடவேண்டும் என தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவிட வேண்டி கேட்டுக்கொள்கிறோம். Chief Minister of Tamil Nadu . #தமிழகவெற்றிகழகம் #தூத்துக்குடி
தமிழக சமத்துவ மக்கள் கட்சி
04/06/2026
#விழுப்புரம்மாவட்டம்விக்கிரவாண்டியில்
#மின்சாரம் தாக்கி உயிரிழந்த அய்யனார்.55 மற்றும் சாந்தி 45 அவருடன் படுகாயம் அடைந்த காமாட்சி அவர்களும் ஆம்பூரில் மின்சாரம் தாக்கி உயிர் இழந்த 18 வயது சிறுவனுக்கும்.
மின்சாரத்தை அரசு சரியான முறையில் கையாளாததாலும் ஆபத்தை விளைவிக்கும் முறையில் கையாண்டதாலும் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா {10} லட்ச ரூபாய் நிதி உதவியும் காயம் அடைந்த காமாட்சிக்கு உரிய மருத்துவ சிகிச்சையும் உரிய நிவாரணமும் அரசு வழங்கிட வேண்டும் மிண்சாரங்களை சரியாக கையாலாத அதிகாரிகளின் மேல் அரசு உரிய தடவடிக்கை எடுத்திடவேண்டும். Chief Minister of Tamil Nadu. #முதல்வர்_ச_ஜோசப்விஜய்
02/06/2026
தமிழகஅரசு பள்ளி திறக்கும் நேரம் நெருங்கும் வேளையில் பள்ளிகளில் உள்ள மராமரத்து புனரமைப்பு மற்றும் கட்டிட பணிகளை
பள்ளிக்கல்வித் துறை (School Education Department): எந்தெந்தப் பள்ளிகளில் பழுதுகள் உள்ளன, எங்கு முன்னுரிமை தந்து சீரமைக்க வேண்டும்
பொதுப்பணித்துறை (PWD) அல்லது உள்ளாட்சி அமைப்புகள்: மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளின் கட்டிடப் பராமரிப்பு, குடிநீர் வசதி, கழிப்பறைச் சீரமைப்பு மற்றும் வர்ணம் பூசுதல் போன்ற பணிகளை இந்தத் துறைகளின் மூலமாக விறைவாக பணிகளை முடித்திடவும் மாணவர்களின் கள்வியில் எந்த இடையூறும் இல்லாநிலையை தமிழக அரசு உறுதிசெய்திடவேண்டும். Chief Minister of Tamil Nadu
16/05/2026
மாண்புமிகு தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் காவல்துறை உள்துறை பொதுத்துறை உள்ளிட்ட துறைகள் மேம்பட பல்வேறு சிறப்பு திட்டங்களை உருவாக்கி நாட்டின் நலனுடன் மக்கள் நலனுமாய் இருக்க வாழ்த்துகிறோம். Chief Minister of Tamil Nadu. தமிழக சமத்துவ மக்கள் கட்சி