சுந்தர பெருமாள் கோயில் உங்களை அன்புடன் வரவேற்கிறது Mini Buses also avl from Kumbakonam...
Are you a resident of Sundara Perumal Koil? once a resident?
சுந்தர பெருமாள் கோயில் (Sundara Perumal Koil) பசுமை வளங்கள் மிகவும் கொண்ட ஒரு அழகான கிராமம். கும்பகோணத்திலிருந்து தஞ்சை செல்லும் சாலையில் 9 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தக் கிராமத்தில் சோழர்கள் காலத்தில் கட்டபட்ட ஸ்ரீ செளந்தராஜ பெருமாள் சன்னதி உள்ளதால் முதலில் அடையாளத்துக்காக செளந்தராஜ பெருமாள் கோவில் என்று அழைக்கப்பட்டு அதுவே பின்னர் மருவி சுந்தரப்பெருமாள் கோவிலாக ஆகியிருக்க கூடும் என்றும் கருதப்ப
டுகிறது. சோழர் காலத்தில் சுந்தர சோழ விண்ணகரம் என்று வழங்கப்பட்ட இவ்வூர் இப்போது மருவி சுந்தர பெருமாள் கோவில் என்று வழங்கப்படுகிறது. மேலும் சோழர்கள் ஆட்சிகாலத்தில் தலைநகராக இருந்த பழையாறை இந்த ஊரிலிருந்து தென் கிழக்குத் திசையில் 8 கி.மீ தொலைவிலுள்ளது. இவ்வூரைச் சுற்றி தாராசுரம், பாபநாசம், சுவாமிமலை, பட்டீஸ்வரம் போன்ற பழமை வாய்ந்த பல கோவில்கள் உள்ளன.
இங்கு விவசாயம் முக்கிய தொழிலாகும். குறிப்பாக ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், முல்லை, சம்பங்கி, காக்கரட்டான் போன்ற மலர்கள் உற்பத்தி அதிகமாக காணப்படுகிறது. மேலும் நெல் உற்பத்தியும் கணிசமான அளவில் நடைபெறுகிறது. இந்த ஊரை சுற்றிலும் காவிரி தன் கிளை ஆறுகளுடன் முடிகொண்டான், குடமுருட்டி, திருமலைராஜன், அரசலாறு, கொள்ளிடம் ஆகிய ஆறுகள் பாய்வதால் மிகவும் வளமாக காணப்படுகிறது. கோடைகாலத்தில் கூட தண்ணீர்ப் பஞ்சம் இருக்காத அளவுக்கு பசுமையான ஊராக உள்ளது. ஆற்றங்கரைகளில் கொண்டாடப்படும் ஆடிப்பதினெட்டுத்திருவிழா அந்த புதுமணப்பெண்கள் போல அழகு..
இந்த ஊரில் அரசு மருத்துவமனை, அரசு நூலகம்,இரண்டு தொடக்கப்பள்ளிகள்,ஒரு உயர்நிலைப்பள்ளி,கால்நடை மருத்துவமனை,வாகன வசதி,பேருந்து,புகைவண்டி நிலையம் என அனைத்து வசதிகளும் இருப்பதால் ஒரளவு தன்னிறைவடைந்து காணப்ப்படுகிறது.
- Sathish
Welcome to the God's Own Village!!!! Hi Friends, this is a cmnty for people those who are from Sundara Perumal Koil...
It's very Beautiful Village… Surrounding with very Greenish, flowers Odors, Rivers and historical several centuries old temple of the handsome Soundara Raja Perumal Temple...
It's 8 KM near from Kumbakonam….. Buses between Kumbakonam and Thanjavur stop near the railway level crossing at Sundara Perumal Koil ( about 2kms West of Swami Malai and 5kms East of Papanasam). future resident? your ancestors lived here? visited atleast once? then Welcome to the Sundara Perumal Koil community...
Discuss anything and everything about this beautiful place here....