Suresh Esakkipandi

Suresh Esakkipandi

Share

Mechanical Engineer, Blogger,
Political Activist at CPIM
Bharathi Puthakalayam

25/08/2025

சமத்துவ தமிழ்நாடு !
சமர் புரியும் வரலாறு !

என்னும் மைய முழக்கத்தோடு …

போராடும் வரலாறாய் நிற்கும் தமிழ்நாடும் …
கீழடியையும் சிந்துசமவெளி நாகரிகத்தையும் இணைக்கும் காளையையும் குறியீடுகளாக்கி

போர்பரணி பாடும் மாநாடாக 18 வது தமிழ்நாடு மாநில மாநாடு !

அக்டோபர் 12,13,14 - ஓசூர்



#சமத்துவ_தமிழ்நாடு
#சமர்புரியும்_வரலாறு

Photos from Suresh Esakkipandi's post 03/08/2025

திருநெல்வேலியில் நடந்த இளைஞர் கவின் மீதான ஆணவ படுகொலையை கண்டித்தும், சாதி ஆணவ படுகொலையை தடுத்திட தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். ஓட்டப்பிடார ஒன்றிய செயலாளர் சுடலைமணி, முன்னாள் நகர நிர்வாகி அந்தோணிச் செல்வம்,
சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் தெய்வேந்திரன் ஆகியோர் உரையாற்றினார். நிறைவாக மாவட்ட செயலாளர் சுரேஷ் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விளாத்திகுளம் தாலுகா செயலாளர் அய்யனார், நகர நிர்வாகிகள் முனீஸ்வரன்,ராகவ், ஒன்றிய நிர்வாகிகள் வசந்த்,தெய்வேந்திரன், ஆசாத், முன்னாள் நிர்வாகிகள் உமாசங்கர்,மாரிக்குட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Photos from Suresh Esakkipandi's post 28/07/2025

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஓட்டப்பிடாரம் ஒன்றியம் இடைக்கமிட்டி மாநாடு நேற்று (ஜூலை 27) மாலை 5 மணியளவில் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் அரவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டை விளாத்திகுளம் தாலுகா செயலாளர் அய்யனார் துவக்கி வைத்து உரையாற்றினார். பின்னர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சித்ராதேவி மற்றும் வாலிபர் சங்க தூத்துக்குடி மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முகராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அதனை தொடர்ந்து மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் சுடலைமணி எதிர்கால பணி மற்றும் தீர்மானங்களை முன் வைத்தார். ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. புதிய ஒன்றிய தலைவராக அரவிந்தசாமி, செயலாளராக சுடலைமணி, பொருளாளராக கணேஷ், துணை தலைவர்களாக சுரேஷ்குமார் மற்றும் பெருமாள் துணை செயலாளர்களாக ராமர் செல்வம் மற்றும் ஆகியோர் உடன் ஆனந்தபாபு, வினோத், பிரவீன், முத்துக்குமார், சுஜித் என 11 பேர் கொண்ட புதிய ஓட்டப்பிடாரம் ஒன்றியக் கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. இதில் நிறைவாக மாவட்ட செயலாளர் சுரேஷ் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். ஓட்டப்பிடாரத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான கட்டிடங்களை விரைந்து கட்டி முடிக்கவும், தெற்கு தீத்தாம்பட்டியில் வசிக்கும் ஆதி திராவிடர் மக்களின் பயன்பாட்டில் உள்ள சுடுகாட்டிற்கு சாலை வசதி ஏற்படுத்த கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

05/07/2025

இன்று (05.07.2025) மாலை 5.30 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பரமன்குறிச்சி கிளை ( ) கமிட்டி மாநாடு தோழர். வினோத் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் தோழர். இ.சுரேஷ் கருத்துரை வழங்கி 2025 ஆம் ஆண்டுக்கான உறுப்பினர் பதிவை துவக்கி வைத்தார். இதில் புதிய கிளை தலைவராக தோழர்.மாணிக்கம், கிளை செயலாளராக தோழர்.மணி கண்ணன் ஆகியோர் உடன் அருண் சிவசங்கர், சின்ராஜ், கலை அஜித், சிவானந்தன், இரத்தினவேல், அர்ஜுன் சிவசங்கர், தனுஸ், நாயகன் என 10 பேர் கொண்ட கிளை கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட தோழர்கள் அனைவருக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் #தூத்துக்குடி மாவட்டகுழு சார்பில் புரட்சிகர வாழ்த்துக்கள்.

Photos from Suresh Esakkipandi's post 04/05/2025

தருமபுரி மாவட்டம், ஒக்கேனக்கலில் தோழர்களுடன்
மே 3,4 -2025

16/02/2025

தூத்துக்குடி மாவட்டம் கீழ ஈரால் பகுதியைச் சேர்ந்த ஜெயம்மாள் என்பவருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாளை கேன்சர் ஆப்ரேஷன் இருப்பதால் ரத்தம் தேவையென ரத்த தான கழகத்தை அணுகிய போது உடனடியாக முன் வந்து ரத்த தானம் செய்த தூத்துக்குடி மாநகரைச் சேர்ந்த அன்பு தோழர் தெய்வநாயகத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் இதயம் கனிந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

இவன்

இரத்ததான கழகம்
தூத்துக்குடி மாவட்டம்
தொடர்புக்கு: +918344076012, +919025417278, +917402391977

Want your business to be the top-listed Government Service in Tuticorin?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Tuticorin