08/06/2026
*தூத்துக்குடி மாவட்ட சர்வதேச உரிமை கழகத்தின் சார்பில் மனு அளித்தல்*
இன்று 08.06.2026 (திங்கட்கிழமை) அன்று, பாதிக்கப்பட்ட பெண்ணின் நலன் மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில், அவருடன் இணைந்து தூத்துக்குடி மாவட்ட சர்வதேச உரிமை கழகத்தின் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனு அளிக்கும் நிகழ்வில், சர்வதேச உரிமை கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கவும், அவரது குறைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.
பொதுமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டரீதியான மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இந்த மனு வழங்கப்பட்டது.
*மக்கள் நலனும், மனித உரிமைகளும் காக்கப்பட வேண்டும் என்பதே சர்வதேச உரிமை கழகத்தின் முதன்மை நோக்கமாகும்.*
01/06/2026
நேற்று கழுகுமலையில் சர்வதேச உரிமை கழகத்தின் மாநில துணைத்தலைவர் அண்ணன் S.K.காளிராஜ்பாண்டியன்* அவர்களின் புதல்வி திருநிறைச்செல்வி K..கலையரசி அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த எங்கள் சர்வதேச உரிமை கழகத்தின் நிறுவன தலைவர் அண்ணன் திரு DR.Moses செல்லதுரை BA, BL ,.உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அவர்களை தென்காசி வடக்கு மாவட்ட சர்வதேச உரிமை கழகத்தின் சார்பில் வரவேற்ற மகிழ்ந்த தருணம் நிகழ்வில் திரு.பொன்ராஜ் சர்வதேச உரிமை கழகத்தின் தென்காசி வடக்கு மாவட்ட துணை தலைவர் மற்றும் திரு.சங்கர் வழக்கறிஞர் சர்வதேச உரிமை கழகம் தென்காசி வடக்கு மாவட்ட பொருளாளர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
அன்புடன்...........
*ம.ரத்னவேல்குமார்*
தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் சர்வதேச உரிமை கழகம் சங்கரன்கோவில்
27/05/2026
சிவகளை ஊர் மக்கள் அனைவரும் தங்களால் இயன்ற அளவில் நிதி வழங்கி, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 108 ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தியுள்ளனர்.
இதற்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தூத்துக்குடி சர்வதேச உரிமை கழகத்தின் சார்பில் தலைவர் திரு M. அந்தோணி சவரி முத்து, துணைத் தலைவர் திரு M. சந்திரகுமார், செயலாளர் திரு R. K. பிரேம், பொருளாளர் திரு ஆரோக்கிய ராஜ், இளைஞர் அணி தலைவர் திரு அருள், மீனவர் அணி தலைவர் திரு R. K. ரமேஷ், தென் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ஜெயசீலன், வர்த்தக அணி தலைவர் திரு சூசை, தொழில்நுட்ப ஊடகப் பிரிவு திரு T. S. M. கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் மனு அளித்து, சிவகளை ஊர் மக்களின் தேவைக்காக உறுதுணையாக செயல்பட்டனர்.
இந்த நிலையில், சிவகளையைச் சேர்ந்த தொல்லியல் துறை ஆசிரியர் திரு மாணிக்கம் அவர்கள் மற்றும் சிவகளை ஊர் பொதுமக்கள் அனைவரும், தங்களுக்கு பக்கபலமாக இருந்து உதவி செய்த சர்வதேச உரிமை கழகத்திற்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
16/05/2026
நமது மாநில துணைத்தலைவர் இல்ல விழா அழைப்பிதழை தென்காசி மாவட்ட அரசு அதிகாரிகளுக்கு வழங்கிய போது