ஜெகன் பெரியசாமி

ஜெகன் பெரியசாமி

Share

மாநகர மேயர் , மாநில தலைமை செயற்குழு உறுப்பினர்.

Photos from ஜெகன் பெரியசாமி's post 31/05/2026
Photos from ஜெகன் பெரியசாமி's post 28/05/2026

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவதற்காக வல்லநாடு பகுதியில் உள்ள மாநகராட்சி குடிநீர் ஏற்று நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். உடன் மாநகராட்சி ஆணையர் திருமதி.பிரியங்கா இ.ஆ.ப அவர்கள், வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.ரவீந்திரன் அவர்கள், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான திரு.சுரேஷ்குமார் அவர்கள், பகுதி கழக செயலாளர் திரு.ரவீந்திரன் அவர்கள், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தம்பி தொ.நிர்மல்ராஜ் அவர்கள், மாமன்ற உறுப்பினர் திரு.கனகராஜ் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்.

Photos from ஜெகன் பெரியசாமி's post 27/05/2026

தூத்துக்குடி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று எனது தலைமையில் நடைபெற்றது. உடன் மாநகராட்சி ஆணையர் திருமதி.பிரியங்கா இ.ஆ.ப அவர்கள், துணை மேயர் திருமதி.ஜெனிட்டா அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள்.

Photos from ஜெகன் பெரியசாமி's post 27/05/2026

கதூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சண்முகபுரம் பகுதியில் நடைபெற்ற குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன் மேலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சில நாட்களாக இருந்து வந்த குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டு இன்று முதல் சீரான குடிநீர் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். உடன் பொதுக்குழு உறுப்பினர் திரு.கோட்டு ராஜா அவர்கள், வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.ரவீந்திரன் அவர்கள், வட்ட கழகப் பிரதிநிதி திரு.டிகேஎஸ்.துரை அவர்கள், பகுதி சபா உறுப்பினர் திரு.எம்பிடி.செல்வராஜ் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்.

Photos from ஜெகன் பெரியசாமி's post 26/05/2026

தமிழினத்தின் ஒப்பற்ற தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான டாக்டர் திரு.கலைஞர் அவர்களால் முரட்டு பக்தன் என்று அன்போடு அழைக்கப்பெற்ற எனது தந்தையாரும் தூத்துக்குடி மாவட்ட மக்களால் அன்போடு அண்ணாச்சி என்று அழைக்கப்பட்ட திரு.என்.பெரியசாமி அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளிலும் எங்களோடு கலந்து கொண்டு எங்களுக்கு உறுதுணையாக இருந்த கழக நிர்வாகிகளுக்கும், நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

Photos from ஜெகன் பெரியசாமி's post 24/05/2026

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அரசு தலைமை மருத்துவமனை, மார்க்கெட் அண்ணா சிலை அருகில் மற்றும் அண்ணா (பழைய) பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பணிகள் நிறைவுற்று மாநகர மக்களின் பயன்பாட்டில் உள்ள சுகாதார வளாகங்களை பார்வையிட்ட ஆய்வு செய்தேன். உடன் மாநகராட்சி ஆணையர் திருமதி.பிரியங்கா இ.ஆ.ப அவர்கள், வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.ரவீந்திரன் அவர்கள், பகுதி கழக செயலாளர் திரு.ரவீந்திரன் அவர்கள், மாமன்ற உறுப்பினர் திரு.கனகராஜ் அவர்கள்.

Photos from ஜெகன் பெரியசாமி's post 24/05/2026

தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகள், கையுறைகள் மற்றும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் அடையாள அட்டைகள் வழங்கினேன். உடன்
மாநகராட்சி ஆணையர் திருமதி.பிரியங்கா இ.ஆ.ப அவர்கள், வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.ரவீந்திரன் அவர்கள், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான திரு.ராமகிருஷ்ணன் அவர்கள், பகுதி கழக செயலாளர் திரு.ரவீந்திரன் அவர்கள், மாமன்ற உறுப்பினர் திரு.கனகராஜ் அவர்கள்.

Photos from ஜெகன் பெரியசாமி's post 22/05/2026

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திரேஸ்புரம் பகுதியில் நடைபெற்ற குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். உடன் பகுதி கழக செயலாரும் மண்டல தலைவருமான தம்பி தொ.நிர்மல் ராஜ் அவர்கள், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் திருமஅந்தோணி அவர்கள், மாமன்ற உறுப்பினர் திருமதி.பவானி அவர்கள், வட்ட கழக பிரதிநிதி திரு.மார்சல் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்.

22/05/2026

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் மண்ணையும் மக்களையும் காப்பதற்காக தன்னுயிர்களை ஈந்த தியாகிகளுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!

20/05/2026

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்தான கள ஆய்வுக் குழுவில் கீழ்காணும் பகுதிகளில் என்னை நியமனம் செய்த முன்னாள் முதலமைச்சரும் கழகத் தலைவருமான மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் ...

Want your business to be the top-listed Government Service in Tuticorin?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Polpettai
Tuticorin
628002