Rambuke-ela MMV OBA

Rambuke-ela MMV OBA

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rambuke-ela MMV OBA, Government Organization, Rambuk-Ela, Kandy.

07/02/2026
Photos from Rambuke-ela MMV OBA's post 05/01/2026

முன்மாதிரிமிக்க மனிதநேயச் செயல் 🌱

31.12.2025 அன்று, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ரம்புகே எல கிராமத்தின் உயர்தர (A/L 2026 • 2027) மாணவர்களை சந்திக்க, கம்பஹா – கஹடவிட்ட பகுதியிலிருந்து இளைஞர்கள் குழுவொன்று எமது ஊருக்கு வருகை தந்தது.

இவர்கள் அனைவரும் 2009 O/L தொகுதியில் ஒரே வகுப்பில் கல்வி கற்ற நண்பர்கள் ஆவர்.
2022 ஆம் ஆண்டு எமது பாடசாலை பழைய மாணவர்கள் சங்கம் (OBA) ஏற்பாடு செய்த Leadership Camp நிகழ்வில் பயிற்றுவிப்பாளராக பங்கேற்ற அஷ்ஷெய்க் M.T.M. Nusrath (Naleemi) அவர்களின் மாணவர்களிலிருந்து சிலரே இவ்விஜயத்தில் கலந்து கொண்டனர்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் நிலைமைகளை கேட்டறிந்து, Rambuke Ela MMV பாடசாலையின் கல்விசார் தேவைகளை அறிந்து கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு முன்னர் கம்பளை, கெலி ஓயா, கொட்ராமுல்ல ஆகிய பிரதேசங்களுக்கும் சென்று சேவை செய்துள்ள இவர்கள், இது அவர்களது நான்காவது கள விஜயம் ஆகும்.
📚 இவ்விஜயத்தின் போது,
▫️ பாடசாலை அதிபர்.S H.M azmy (Slps)
▫️ பெற்றோர்கள்
▫️ உயர்தர மாணவர்கள்
உடன் உயிரோட்டமான கலந்துரையாடல் நடைபெற்றது.

அதேவேளை, உயர்தர மாணவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் பாடசாலை அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவை 17 மாணவர்களுக்கு உடனடியாக வழங்கப்பட்டன.

🤝 ஒரு ஆசிரியரும் அவரது மாணவர்களும் கொண்டுள்ள நீண்டகால பாசப்பிணைப்பையும், சமூகப் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்தும் முன்மாதிரிமிக்க செயற்பாடாக இவ்விஜயம் அமைந்தது.

🙏 இச்சேவையை மேற்கொண்ட கஹடவிட்ட இளைஞர்கள் குழுவிற்கு,
எமது மாணவர்கள், பாடசாலை மற்றும் பழைய மாணவர்கள் சார்பாக உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

🙏 அதேபோல், இவ்விஜயத்திற்கு வழிகாட்டி ஒருங்கிணைத்த
அஷ்ஷெய்க் M.T.M. Nusrath (Naleemi) அவர்களுக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும்.

🤲 வல்ல அல்லாஹ் நம்மனைவரதும் நற்செயல்களை அங்கீகரித்து, அருள் பரிவானாக. ஆமீன்

14/11/2025

GET READY TO PLAY 🏏

Want your business to be the top-listed Government Service in Kandy?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Rambuk-Ela
Kandy
20142